எந்தெந்த முக கவசம் பயன்படுத்தலாம்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 16, 2020

எந்தெந்த முக கவசம் பயன்படுத்தலாம்?

அத்தியாவசிய தேவைகளுக்காக, பொது மக்கள் வெளியில் வரும் போது, சாதாரண இரண்டடுக்கு முகக் கவசங்களை பயன்படுத்தலாம்,'' என, சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



சென்னை மாநகராட்சி பகுதிகளில், 'கொரோனா வைரஸ்' நோய் தொற்று பாதித்தவர்களுடன், தொடர்பில் இருந்த நபர்களை, பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று, பரிசோதனை மேற்கொள்ள, 'போர்டு இந்தியா மோட்டார்ஸ்' நிறுவனம் சார்பில், 25 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


பின்னர், அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையின், ஒரு பகுதியாக, பொது மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக, வெளியில் வரும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வகையில், இரண்டடுக்கு முகக் கவசம், கைக்குட்டை, சுத்தமான துணியால் செய்யப்பட்ட முக கவசம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.





அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும், மருத்துவ முக கவசம் அல்லது, 'என் -95' முக கவசங்களை பயன்படுத்த தேவையில்லை. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய, மறு பயன்பாடு கொண்ட, முக கவசங்களை பயன்படுத்தினாலே போதும்.ஒருவருக்கு, இரண்டு முக கவசங்களை, தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். உபயோகித்த பின், சோப்பு மற்றும் வெந்நீரில் சுத்தம் செய்து, நன்கு உலர்ந்த பின், மீண்டும் பயன்படுத்த வேண்டும்.




இதுபோன்ற மறு பயன்பாட்டிற்கு உகந்த முக கவசங்களை, துாய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், கொரோனா நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் பயன் படுத்தக் கூடாது. அவர்கள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட, முக கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஒருவர் பயன்படுத்திய முக கவசத்தை, மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், தனித்தனி முக கவசங்களை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment