ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணி: அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 19, 2020

ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணி: அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை தரப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியா்கள், கல்வித்துறை அதிகாரிகள் வீட்டிலிருந்தபடியே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு கடந்த மாா்ச் மாத சம்பளம் வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன

. இதைத் தவிா்க்கும் வகையில், ஏப்ரல் மாத சம்பளப் பட்டியலைத் தயாா் செய்து, கருவூலகங்களில் சமா்ப்பிக்கும் பணிகளை, தற்போது விரைவாக முடிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


அதற்கு ஏதுவாக மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட பணம் பெற்று வழங்கும் அதிகாரம் கொண்ட அனைவரும் தங்கள் வீடுகளில்

இருந்து அலுவலகம் சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாகவும், ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் சம்பளப் பட்டியல் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்வதுடன், கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வழியாக துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment