கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா வைரஸ் வடிவில் காரை நிறுவிய நிபுணர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா வைரஸ் வடிவில் காரை நிறுவிய நிபுணர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கே.சுதாகர் என்பவர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "கொரோனா வைரஸ் கார்" ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,274-லிருந்து 5,734-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149-லிருந்து 166-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 166 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் இதுவரை 63 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கையும் வைத்துள்ளார்.


இந்நிலையில், ஹைதராபாத் நகரில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.சுதாகர் என்பவர் கொரோனா வைரஸ் வடிவில் காரை வடிவமைத்துள்ளார்

. இந்தக் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கார் மூலம் நகர்வலம் வரும் சுதாகர் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தி வருகிறார்.

No comments:

Post a Comment