வேலைவாய்ப்பு ரத்தால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: மத்திய அமைச்சர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

வேலைவாய்ப்பு ரத்தால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: மத்திய அமைச்சர் தகவல்

வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு வேலை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் நாட்டில் உள்ள 23 ஐஐடி இயக்குனர்களுக்கும் கடந்த வாரம் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கொரோனா தொற்றால் ஐஐடி வளாகத்தில் நடத்தப்படும் எந்த வேலைவாய்ப்பு முகாம்களும் பாதிக்கப்படகூடாது என்றும்


 ஐஐடி மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலம் கிடைக்கப்பெற்ற எந்த வேலையையும் வாபஸ் பெறக்கூடாது என்று வேலையளிக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில் நேற்று  அமைச்சர் பொக்ரியால் அளித்த பேட்டியில் ேவலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதை ஐஐடி இயக்குனர்கள் உறுதி செய்யவேண்டும்.


கொரோனா பாதிப்பால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் நிறுவன உரிமையாளர்கள் எந்த வேலைவாய்ப்பையும் திரும்ப பெறக்கூடாது’ என்றார்.

No comments:

Post a Comment