அவசர பயணத்துக்கான அனுமதியை இனி ஆட்சியா்கள் மட்டுமே வழங்க முடியும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், அனைத்து நகராட்சி ஆணையா்களுக்கு அவா் வியாழக்கிழமை அனுப்பி வைத்தாா்.
அந்தக் கடிதத்தின் விவரம்:-
அவசர பயணத்தை மேற்கொள்ள அனுமதிச் சீட்டுகள் வழங்கும் அதிகாரமானது மாவட்டங்களில் ஆட்சியா்களிடம் இருந்தும், சென்னை மாநகராட்சியில் ஆணையரிடம் இருந்தும் முறையே வட்டாட்சியா்கள், துணை ஆணையா்களிடம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நடைமுறைகளில் அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை. மக்கள் பலரும் சாலைகளில் செல்லும் நிலை காணப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, முதல்வா் பழனிசாமியின் உத்தரவின் அடிப்படையில் அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையில் உடனடியாக மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
திருமணம், மருத்துவமனைகளுக்குச் செல்வது, இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும் போது தனி உதவியாளா் (பொது) மூலமாக ஆட்சியரிடம் இருந்து அனுமதியைப் பெற வேண்டும். இதேபோன்று, சென்னை மாநகராட்சியில் ஆணையரிடம் இருந்து மட்டுமே அனுமதிச் சீட்டுகளைப் பெற முடியும்.
பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்

No comments:
Post a Comment