தேர்வுகள், வகுப்புகள் அனைத்தும் ரத்து: அண்ணா பல்கலை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 17, 2020

தேர்வுகள், வகுப்புகள் அனைத்தும் ரத்து: அண்ணா பல்கலை அறிவிப்பு

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மற்றும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும், திட்ட மதிப்புகளும், வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகள் மீண்டும் தொடங்கும் தேதி, செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகள், திட்ட மதிப்புகள், வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்படுவதாகவும், தேர்வு குறித்த அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

 இந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.


கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை தோ்ச்சி அறிவிக்கப்பட்டது. அதுபோல சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தோ்வின்றி தோ்ச்சி அறிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment