கொரானா:சர்வதேச நாடுகளுக்கு பாடம் கற்று கொடுத்த தைவான் நாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

கொரானா:சர்வதேச நாடுகளுக்கு பாடம் கற்று கொடுத்த தைவான் நாடு

கடந்த ஜனவரி மாதம், முதல் கொரோனா வைரஸ்அச்சுறுத்தல் உலக நாடுகளை பற்றி கொண்டது.

இந்த வைரஸ் உண்டான சீனாவுடன் தைவானும், ஆஸ்திரேலியாவும் நெருங்கிய நட்பு மற்றும் வர்த்தக உறவு கொண்டவை. இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகையும் ஏறத்தாழ 2.4 கோடி பேர். ஜனவரி மாதம், இரு நாடுகளிலும் தலா 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்தன.



ஆனால், 10 வாரங்கள் கடந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. தைவானில் 400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.


ஆஸ்திரேலியாவை காட்டிலும் பல நாடுகளில் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தைவானில் எப்படி கட்டுக்குள் வைத்துள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்தது.சார்ஸ் வைரஸ் கற்று கொடுத்த பாடம்கடந்த 2003 ல் சார்ஸ் வைரஸ் பரவிய போது தைவான் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது 181 பேர் உயிரிழந்தனர்.

 1,50,000 பேர் தனிமைபடுத்தப்பட்டனர். இந்த சார்ஸ் வைரஸ் பரவிய போது ஏராளமான ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டன.

ஆதனால், அந்நாடுகள்பல பாடங்களை கற்று கொண்டன. அது தற்போதைய கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கும், ஆபத்தை விரைவாக எதிர்கொள்வதற்கும் உதவியாக அமைந்தது.

இதனால், கடந்த ஜனவரி முதலே, எல்லைகளை மூடப்பட்டதுடன், முகமூடி அணியவும் உத்தரவிடப்பட்டது.தைவானில், உலக தரத்திலான மருத்துவ வசதிகளும், திட்டங்களும் உள்ளன. வூஹானில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும், சார்ஸ் வைரஸ் கற்று கொடுத்த பாடத்தின்படி தைவான் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கையில் இறங்கினர்.

பொது மக்களின் நலனை காக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக 124 குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் சீனாவில் உண்டான கொரோனா வைரசால், அந்நாட்டுக்கு அருகில் இருக்கும் தைவான் மோசமாக பாதிக்கும் என தகவல் வெளியானது.


ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் செயல்பட்ட தைவான், சீனாவிற்கு செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்தது. அந்நாட்டிற்கு செல்லும் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தியது.

விதிகளை மீறியவர்கள் மீது கடுமையானநடவடிக்கைகளையும் எடுத்தது.இதனுடன், தைவான் அதிகாரிகள், மக்கள் முகமூடி அணிந்து செல்லும் வகையில் அதனை எளிதாக கிடைப்பதற்கு நடவடிக்கைகளை துவக்கினர்

. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை செய்தது. வதந்தி பரப்புவோர்களை தண்டிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்கியது. மேலும் கொரோனா தொற்று குறித்து தைவான் அதிகாரிகள் தினமும் விளக்கம் அளித்தனர்.

இந்த நவடிக்கை, உலகளாவிய தொற்றை கட்டுப்படுத்தும் போது எப்படி செயல்படுவது என்பது குறித்து சர்வதேச நாடுகளுக்கு பாடம் கற்று கொடுத்தது.


சீனா உள்ளிட்ட பல நாடுகளில் அமல்படுத்தப்படும் கடுமையான ஊரடங்கு போல் தைவானில் அமல்படுத்தப்படவில்லை. உள்ளூர் மக்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கு மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை விதித்த தைவான், 1 கோடி மாஸ்க்குகளை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும், தன்னுடன் தூதரக ரீதியாக நட்பு வைத்துள்ள நாடுகளுக்கும் நன்கொடையாக வழங்கியது.

கொரோனாவை கட்டுப்படுத்திய தைவானின் நடவடிக்கைகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உண்டாகிய மோசமான கொரோனா தொற்றில் மறைந்துவிட்டது. தைவானிடமிருந்து பாடம் படிப்பதற்கான தருணங்களை, அந்நாடுகள் கடந்துவிட்டன.

No comments:

Post a Comment