சீனாவில் கொரோனா பரவ துவங்கிய காலகட்டத்தில் அதிகளவு மாஸ்க்குகளை , அமெரிக்கா ஏற்றுமதி செய்ததால், தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பலரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரை:
கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிப்பதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், அந்நாட்டிற்கு லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு மிக்க மாஸ்க்குகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை அமெரிக்கா ஏற்றுமதி செய்தது
. இந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மாஸ்க் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.4 மில்லியன் டாலர் மதிப்பு மாஸ்க் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், தற்போது 17.6 மில்லியன் டாலர் மதிப்பு மாஸ்க்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.அதேபோல், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு ஆடைகள் ஏற்றுமதியும் மும்மடங்கு அதிகரித்தது.கொரோனாவை எதிர்கொள்வதற்கு தயாராகாமல், ஏற்றுமதி குறித்த அறிவுரைகளை புறந்தள்ளினர்.
இதனால், தற்போது மக்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை பற்றாக்குறை உள்ளது. மாஸ்க் உள்ளிட்டவை பற்றாக்குறை ஏற்பட்டதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் மோசமாக பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தேவையானவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment