தெறித்து ஓடும் இளைஞர்கள்'': திருப்பூர் போலீசாரின் புது வைத்தியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

தெறித்து ஓடும் இளைஞர்கள்'': திருப்பூர் போலீசாரின் புது வைத்தியம்

முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் நூதன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான பொது ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே செல்வது, முகக்கவசம் அணியாமல் நடமாடுவது போன்ற அலட்சியங்கள் பெரும்பாலான இடங்களில் அரங்கேறி வருகின்றன. 


இவ்வாறு நடந்து கொள்வோரை எச்சரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்

அதில், முகக்கவசமும், தலைக்கவசமும் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் 3 பேரை காவல்துறையினர் நிறுத்துகின்றனர்

அவர்களை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுகின்றனர். அந்த வாகனத்திற்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர் போல சித்தரிக்கப்பட்டிருப்பவர் ஒருவரும் இருக்கிறார்

வாகனத்தில் ஏற்றப்படும் இளைஞர்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அவர் நடந்துகொள்கிறார். மெல்லிய நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



No comments:

Post a Comment