என்னை கவுரவப்படுத்த விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுத்து உதவுங்கள்: சமூக வலைதள குறும்புக்கு பிரதமர் மோடி பதிலடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

என்னை கவுரவப்படுத்த விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுத்து உதவுங்கள்: சமூக வலைதள குறும்புக்கு பிரதமர் மோடி பதிலடி

பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள்’ என்ற வைரல் டிவிட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மோடி, இது தன்னை சர்ச்சையில் சிக்க வைப்பதற்கான முயற்சியாக தோன்றுவதாக கூறியுள்ளார்.

‘பிரதமர் மோடியை கவுரவிக்க, வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்,’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: என்னை கவுரவப்படுத்த அனைவரும் 5 நிமிடம் எழுந்து நிற்குமாறு சிலர் பிரசாரம் செய்து வருவதாக ஒரு தகவல் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



இது என்னை சர்ச்சையில் மாட்டி விடுவதற்கான குறும்புத்தனமான முயற்சியாக கருதுகிறேன். ஒருவேளை யாராவது நிஜமாகவே என் மீதுள்ள அன்பால், கவுரப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை தத்தெடுங்கள்

. குறைந்தபட்சம் கொரோனா நெருக்கடி தீரும் வரையாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுங்கள். இதை விட வேறு எதுவும் எனக்கு பெரிய கவுரவம் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆரோக்கிய சேது ஆப்: மேலும், பிரதமர் மோடி ‘ஆரோக்கிய சேது’ மொபைல் ஆப்-ஐ மக்கள் அனைவரும் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

அதற்கான லிங்க்.யையும் அவர் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த ஆப், கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் அருகில் சென்றால் நமக்கு எச்சரிக்கை செய்யும். மேலும், கொரோனா குறித்து நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகளும் இந்த ஆப்பில் உள்ளன. இந்த ஆப்பை மத்திய அரசு கடந்த 2ம் தேதி வெளியிட்டது.

No comments:

Post a Comment