கொரோனா பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி பரிசோதனை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

கொரோனா பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி பரிசோதனை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக மேற்கொள்ள உடனே அரசாணை வெளியிட உத்தரவிட்டுள்ளது.


 சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.


கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை இலவசம் என்றால் தனியார் மருத்துவமனைகளில் 4500 கட்டணம் என அரசே நியமித்து இருந்தது. இருப்பினும், ஏழை மக்கள் 4500 ரூபாய் கொடுத்து எப்படி கொரோனா பரிசோதனை செய்துகொள்வார்கள் என்ற கருத்துக்கள் எழுந்தன.


இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


 இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை வெளியிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு தனியார் மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும்



, கொரோனா தடுப்பு விவகாரத்தில் அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே படைவீரர்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment