முதல்வருக்கு பள்ளி ஆசிரியர் கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 7, 2020

முதல்வருக்கு பள்ளி ஆசிரியர் கடிதம்

:கொரோனா தொற்றுக்காக மூடப்பட்ட, மதுபான கடைகள் நிரந்தரமாக திறக்கப்படாமலே இருந்தால், பல குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டு விடும் என, அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், முதல்வரின் தனி பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.




தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மது அருந்தினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என, தமிழக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, அரசுப்பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார், முதல்வர் தனிப்பிரிவுக்கு, எழுதியுள்ள கடிதத்தில், தொடர்ந்து மதுவிலக்கை அமல்படுத்த கோரியுள்ளார்




.ஆசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், ''மதுக்கடைகள் மூடப்பட்ட கடந்த, 10 நாட்களாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறைந்து, குடும்ப தகராறு புகார்கள் இன்றி, அமைதியான சூழல் நிலவுகிறது. வருமானத்தில் பெரும்பகுதியை, மதுபான கடைகளுக்கு செலவிடுவதால், பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. கொரோனா தொற்றால் இறந்தவர்களை விட, மதுபானம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகம்.என்றார்.

No comments:

Post a Comment