இந்தியாவிலேயே முதல் முறை... இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரம் கொரோனாவிற்கு ஸ்கெட்ச் போட்ட கேரளா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 21, 2020

இந்தியாவிலேயே முதல் முறை... இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரம் கொரோனாவிற்கு ஸ்கெட்ச் போட்ட கேரளா

கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக, இந்தியாவில் இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரத்தை கேரளா எடுத்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, புதுப்புது திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆனால் சுகாதார பணியாளர்களுக்கு தொற்று ஏற்படாமல், கோவிட்-19 நோயாளிகளை கண்டறிவதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்யும் சமயத்தில், சுகாதார பணியாளர்களையும் கோவிட்-19 தொற்றி கொள்கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, 'திரங்கா' (Tiranga) காரை கேரளா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்தான் மாடிபிகேஷன் செய்யப்பட்டு, திரங்கா காராக மாற்றப்பட்டுள்ளது

நோயாளிகளை பாதுகாப்பாக பரிசோதிக்க இந்த கார் பயன்படுத்தப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் தாக்கிய நோயாளிகளை வேகமாக கண்டறிவதற்காக, கேரள மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த டொயோட்டா இன்னோவா காரில் 3 சுகாதார பணியாளர்கள் சென்று, கோவிட்-19 நோயாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதற்கு ஏற்ற வகையில் இந்த மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக வெளியே நிற்பவர்கள், காருக்கு உள்ளே இருக்கும் சுகாதார பணியாளர்களை பார்க்க முடியாது.

அதேபோல் சுகாதார ஊழியர்களும் காருக்கு வெளிய வர மாட்டார்கள். வெளியே நிற்பவர்களிடம் பேசுவதற்கு பொது அறிவிப்பு அமைப்பை சுகாதார பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த காரில் செல்லும் சுகாதார பணியாளர்கள், மக்களின் அடையாள ஆவணங்களை கேட்கின்றனர். மேலும் அவர்களின் பயண விபரங்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் சுகாதார பணியாளர்கள் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இதன்பின் ரெக்கார்டு பராமரிப்பதற்காக இந்த ஆவணங்கள் புகைப்படம் எடுத்து கொள்ளப்படுகிறது

இந்த டொயோட்டா இன்னோவா காரில், இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியே நிற்பவரின் டெம்ப்ரேச்சரை பரிசோதிக்க முடியும். தெர்மல் ஸ்க்ரீன் சிஸ்டம் தவிர்த்து, டூ-வே மைக்ரோபோன் அமைப்பையும் இந்த கார் பெற்றுள்ளது. மக்களுடன் முறையாக உரையாடுவதற்கு, பணியாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்

சுகாதார பணியாளர்கள் காரை விட்டு கீழே இறங்காமலேயே இவை அனைத்தும் செய்யப்படும். இந்தியாவில் இப்படியான ஒரு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சோதனை அடிப்படையில் தற்போது இந்த வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது

கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது உடல் டெம்ப்ரேச்சர் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டாலோ, அவர்களை பற்றிய விபரங்கள் குறித்து கொள்ளப்படுகின்றன. அத்துடன் சம்பந்தப்பட்ட நபர், 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளப்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார். கடந்த 45 நாட்களில், கேரளாவிற்கு வெளியே சென்று வந்தவர்களுக்கும் இதே அறிவுரைதான் வழங்கப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திடம் (Primary Health Centre - PHC) வழங்கப்படுகின்றன. இதன்பின் அத்தகைய நபர்களை பின்தொடர்வதற்கும், பரிசோதனை செய்வதற்குமான பொறுப்பை ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்று கொள்கின்றன.


இந்த டொயோட்டா இன்னோவா, ஆர்எஸ்வி - 1 (RSV-1) என்று அழைக்கப்படுகிறது. ரேபிட் ஸ்க்ரீன் வெய்கில் - 1 (Rapid Screen Vehicle - 1) என்பதன் சுருக்கமே ஆர்எஸ்வி - 1. இதுதவிர ஆர்எஸ்வி - 2 வாகனத்தை அறிமுகம் செய்யும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிகுறி தென்படுபவர்களிடம் இருந்து சாம்பிளையும் இந்த வாகனங்கள் சேகரித்து கொள்ளும்.

எனினும் ஆர்எஸ்வி - 2 வாகனத்தை உருவாக்கும் பணிகள் தற்போதுதான் நடந்து வருகின்றன. கேரளாவின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவிட்-19 பாதிப்பில் இருந்து நோயாளிகளை மீட்டு எடுக்கவும், கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும் கேரளா மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏற்கனவே இந்தியா முழுவதும் கவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment