கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
எனவே, 2019-20 கல்வியாண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வளாகக் கல்வித் தேர்வுகளும், மே 2ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொலைநிலைக் கல்வி இளங் கல்வியியல் தேர்வுகளும், பிற அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
தேர்வுகள் தொடர்பாகப் புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்

No comments:
Post a Comment