தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துகொண்டே இருக்கிறது. நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது
. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 303 பேருக்கும் கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை, ஊடகத்துறை என்று கொரோனா பாதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது
.கொரோனா பாதிப்பு ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் பசியும், வறுமையும் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி கஷ்டப்படும் மக்களுடன் அரசுடன் இணைந்து பல நல்ல உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை வரதராஜபுரத்தில் அரசு உதவி பெறும் தியாகி என்.ஜி.ஆர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் பெரும்பாலும் கட்டட வேலை செய்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் என சுமார் 2,300 பேர் படித்து வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் கட்டட வேலை மற்றும் கூலித் தொழிலாளிகள், வேலை இல்லாமல் அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் நாள்களைக் கடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் உதவி
இதனிடையே, அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த வாரம் தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். அதற்கு அந்த மாணவன், அப்பாவுக்கு வேலையில்லை. சாப்பிடுவதற்கே மிகுந்த சிரமமாக இருக்கிறது சார்' என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை அந்த ஆசிரியர், தலைமையாசிரியர் சதாசிவனிடம் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து, தலைமையாசிரியர் சதாசிவன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார்
. இதன் மூலம், மூன்று லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும், ரூ.1,500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் சதாசிவன், `பல மாணவர்களின் குடும்பங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற தகவல், ஆசிரியர்களின் மூலம் தெரியவந்தது. முதல்கட்டமாக 400 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளோம். ஊரடங்கு உத்தரவு தொடரும் வரை எங்களாலான உதவிகளைத் தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

No comments:
Post a Comment