'மிஸ்டு கால்' கொடுத்தால் மளிகைப் பொருட்கள் வீடு தேடிவரும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 16, 2020

'மிஸ்டு கால்' கொடுத்தால் மளிகைப் பொருட்கள் வீடு தேடிவரும்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான கிருமி நாசினி தெளிக்கும் பணியை நேற்று பார்வையிட்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

வேதாரண்யம் நகராட்சிக் குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 9999719565 என்ற செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், சம் பந்தப்பட்ட நபரை நகராட்சி ஊழியர்கள் தொடர்புகொள்வார் கள்.



 அவர்களிடம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்து கள், காய்கறிகள், மளிகைப் பொருட்களை குறிப்பிட்டால், அவற்றை ஒரு மணி நேரத்துக்குள் நகராட்சி ஊழியர்கள் உங்கள் வீட்டுக்கே வந்து வழங்குவார்கள்

அவர்களிடம் பொருட்களுக் குரிய தொகையை கொடுத்துவிட வேண்டும். மதியம் 1 மணிக்கு பிறகு வரும் அழைப்புகளுக்கு மறுநாள் காலை பொருட்கள் வழங்கப்படும். சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு இச்சேவை கிடையாது என்றார்

No comments:

Post a Comment