சாதி,மதம், இனம் பார்த்து கொரோனா தாக்குவது இல்லை: பிரதமர் மோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 19, 2020

சாதி,மதம், இனம் பார்த்து கொரோனா தாக்குவது இல்லை: பிரதமர் மோடி

கொரோனாவை எதிர்த்து அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது:


மதம், ஜாதி,நிறம் எல்லை பார்த்து கொரோனா தாக்காது. கொரோனாவை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

வரலாற்றின் முந்தைய காலத்தில், நாடுகள் எதிரெதிராக இருந்தது. ஆனால், இன்று, அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுவான சவாலை எதிர்கொள்கின்றன.

எதிர்காலம், ஒற்றுமை பற்றியதாக இருக்கும்.சர்வதேச அளவில் பொருந்தும் அளவில் கொள்கைகளை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும்.


அதற்கு, இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும், சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் இருக்க வேண்டும்.

இளம் தலை முறையினரை கொண்ட நாடான இந்தியா, புதுமையான நோக்கங்களுக்கு பெயர் பெற்றது.

 புதிய வேலை கலாசாரத்தை வழங்குவதில் உலகளவில் முன்னிலை வகிக்க முடியும். கொரோனா தடுப்பில் இந்தியாவின் யோசனைகள் உலகளவில் முக்கியத்துவம் பெற்று பின்பற்றப்படும்.இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment