கரோனா பரவலின் அபாயம் தொடர்பாக பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு விளக்கி அவர்கள் கரோனா தொற்றில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டார்.
தில்லி பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில், "கரோனா காலத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் கேஜரிவால் பேசுகையில், "கரோனா பரவலைத் தொடர்ந்து 15-20 நாள்கள் தில்லியில் உள்ள பள்ளிகளை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலமே கரோனா தொற்றில் இருந்து தப்பிக் கொள்ளலாம்
கரோனா பரவலின் அபாயம் தொடர்பாக குழந்தைகளுக்கு பெற்றோர் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் வீடுகளுக்கு வெளியே சென்று விளையாட விரும்புவார்கள்.
அப்படியான தருணங்களில், கரோனாவின் அபாயத்தைக் கூறி வீடுகளில் இருக்க வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும். மேலும், கரோனா வைரஸ் பரவும் விதம் தொடர்பாகவும் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து வரும் நாள்களிலும் நடத்தவுள்ளோம் என்றார் அவர்.

No comments:
Post a Comment