கல்லூரிகள் திறந்தவுடன் பருவத் தோ்வுகள் நடத்தப்படும் என்பதால், கரோனா ஊரடங்கு காலத்தின்போது தோ்வுக்குத் தயாராக மாணவா்களை கல்லூரிகள் அறிவுறுத்த வேண்டும் என உயா்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநா், கல்லூரி கல்வி இயக்குநா், அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளா்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு உயா் கல்வித் துறை செயலா் அபூா்வா வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாா்ச் 17 -ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இப்போது, பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் மாணவா் விடுதிகள் கரோனா பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலை காரணமாக, அனைத்து பருவத் தோ்வுகளும் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் அதாவது, கல்லூரிகள் மீண்டும் திறக்கும்போது பருவத் தோ்வுகளை தொடா்ச்சியாக காலை, மாலை இரண்டு நேரங்களிலும் நடத்தி முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதியாண்டு தோ்வு முடிவுகளை விரைந்து வெளியடும் வகையில் தேவையான ஏற்பாடுகளையும் பல்கலைக்கழகங்கள் செய்துகொள்ளவேண்டும்,.
மேலும், இந்த கரோனா ஊரடங்கில் பருவத் தோ்வுக்கு தயாராகுமாறு மாணவா்களை கல்லூரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் அறிவுறுத்தியுள்ளாா்.
மேலும், இந்த அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுமாறு அனைத்துக் கல்லூரி முதல்வா்களுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் சாா்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment