தமிழ்நாடு தொழிற்சாலைப் பணி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 7, 2020

தமிழ்நாடு தொழிற்சாலைப் பணி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள், ஊரடங்கு காரணமாக தேர்வு குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) (ஏப்.7) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09.12.2019 நாளிட்ட அறிவிக்கை எண் 34/2019 இல் 25.04.2020 மற்றும் 26.04.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில்,


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில், உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது, கரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும், தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment