இந்தியாவா இது? நம்பமுடியாத அளவிற்கு மாறிய போட்டோவை வெளியிட்ட நாசா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 23, 2020

இந்தியாவா இது? நம்பமுடியாத அளவிற்கு மாறிய போட்டோவை வெளியிட்ட நாசா

கடந்த மாதம் மார்ச் 25, 2020 அன்று ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இதனால் நாசா செயற்கைக்கோள் சென்சார்கள் வட இந்தியாவில் இந்த ஆண்டுக்கான 20 ஆண்டு குறைந்த அளவில் காற்று மாசை அளவை படம் பிடித்து உள்ளன.


கொரோனா பாதிப்பினால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதனால், காற்று மாசுபாட்டின் நம்பமுடியாத அளவிற்கு குறைந்துள்ளது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும்

. இப்போது, இதை உறுதிப்படுத்தும் விதமாக ​​நாசாவின் செயற்கைக்கோள் படம் பிடித்து இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு பதிவிட்டுள்ளது.


நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள், கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையில் படம்பிடித்துள்ள போட்டோவில் வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின் அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது

கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment