பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆன்லைன் மூலம் சொல்லித்தர, கல்வித்துறை புது முயற்சி எடுத்துள்ளது
.கோவை மாவட்டத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் கையாள்கின்றன
.அரசுப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப், ஸ்மார்ட் வகுப்பறை வசதி இருந்தும், அதை பயன்படுத்தி, வகுப்பு கையாள, ஆசிரியர்கள் முன்வருவதில்லை. இதுசார்ந்த பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு குறைந்த நாட்களே வழங்கப்படுகின்றன.
தற்போது, ஊரடங்கு உத்தரவால் ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதால், இச்சமயத்தில் ஆன்லைன் மூலம் அவர்களின் திறன்களை மேம்படுத்த, மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது
.இதற்காக, 'காக்னிசென்ட் அவுட்ரீச்' அமைப்புடன் கைகோர்த்துள்ளது. ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் டிஜிட்டல் லிட்ரசி என்ற இரு தலைப்புகளில், ஆன்லைன் வகுப்பு கையாள திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் போதும்
!மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''தன்னார்வ அமைப்புடன் இணைந்து வழங்கப்படும் இப்பயிற்சி வகுப்புக்கு, ஸ்மார்ட் போன் இருந்தாலே போதுமானது.
விருப்பமுள்ள ஆசிரியர்கள்,
http://tinyurl.com/educationoutreach
என்ற லிங்கில், தகவல்களை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம்.
பாடத்திட்டத்தை எளிமையாக மாணவர்களுக்கு, புரிய வைக்க, இப்பயிற்சி வகுப்புகள் கைகொடுக்கும். ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்

No comments:
Post a Comment