அத்தியாவசியப் பொருள்களை வாங்க தினமும் கடைகளுக்குச் செல்லக் கூடாது என்று முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-
அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. நமக்கு மளிகைப் பொருள்கள் வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றன. பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். அதனால், லாரிகள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இதனால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இனி சரி செய்யப்படும்.
பொது மக்களும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க தினமும் கடைகளுக்குச் செல்லக் கூடாது
ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வீட்டிலேயே வாங்கி வைத்துக் கொண்டால் தினமும் வீட்டை விட்டு வெளியே வர அவசியமில்லை என்றாா் முதல்வா் பழனிசாமி.

No comments:
Post a Comment