மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 22, 2020

மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. 


தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். 

கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படாததால், இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்தது


மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்படுவது கடந்த மார்ச் மாதமே துவங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அச்சகங்கள் ஏதும் செயல்படவில்லை


 அதனால் மாணவர்களுக்கு இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில், 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் புது புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ள லிங்க்கை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.


http://tnschools.gov.in/textbooks

No comments:

Post a Comment