தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கு இங்கு உருவாகியுள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 23, 2020

தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கு இங்கு உருவாகியுள்ளது

ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளது


கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் ஆதரவற்ற பலரும் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது.

 அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.40 நாட்கள் ஊரடங்கு காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

 இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது

. அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது


இங்கே திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்

No comments:

Post a Comment