பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 9, 2020

பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறும் என தகவல்கள் பரவிய நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.


மார்ச் 27ம் தேதி துவங்குவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறும் என வதந்திகள் பரவின.


இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு நடைபெறும் தேதி குறித்து ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்


. மேலும் மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தக் கூடிய சூழல் உருவாக வேண்டும் என்றும், மாணவர்கள் வீண் வதந்திகளை நம்பாமல் கிடைத்திருக்கும் காலத்தை பயன்படுத்தி நன்கு படித்து எப்போதும் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்மாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment