கொரோனாவை சமாளிக்க மிகப் பெரிய படை; மத்திய அரசு நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

கொரோனாவை சமாளிக்க மிகப் பெரிய படை; மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது களத்தில் உள்ள ஊழியர்களின் வேலை பளுவை குறைக்கும் வகையில், மிகப் பெரிய படையை திரட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் நாட்டில் பரவி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அடுத்து வரும் வாரங்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த காலகட்டத்தில்தான், வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


தற்போது, டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என, பல்வேறு பிரிவினர், இந்த வைரஸ் பாதிப்பை தடுக்கும் பணியிலும், சிகிச்சை அளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு தீவிர மடைந்தால், அதை சமாளிக்க, இவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது. அதனால், மிகப் பெரிய படையை திரட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.



இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வைரஸ் பாதிப்பு தீவிர மடைந்தால், தற்போதுள்ள டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் மட்டுமே அதை சமாளிக்க முடியாது. இவர்களின் வேலை பளுவை கூட்டாமல், மக்கள் உயிர் காக்கும் சேவையில், அதிக அளவு ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இதற்காக, 'ஐ - காட்' எனப்படும், ஒருங்கிணைந்த, 'ஆன்லைன்' பயிற்சிக்கான தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. பயிற்சி வகுப்புகள்இதில், டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப ஊழியர்கள், என மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளன.




இதைத் தவிர, பல்வேறு போலீஸ் அமைப்புகள், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை, நேருயுவ கேந்திர சங்கதான், செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம் என, பல்வேறு சேவை அமைப்பினருக்கும் பயிற்சி வகுப்புகள் உள்ளன.இதன் மூலம், வைரஸ் தொற்று தீவிரமடைந்தால், அதை சமாளிக்க, மிகப் பெரிய படை தயாராக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment