அது இலவச இண்டர்நெட் லிங்க் இல்லை.. மோசடி கும்பலின் வலை..' : எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 23, 2020

அது இலவச இண்டர்நெட் லிங்க் இல்லை.. மோசடி கும்பலின் வலை..' : எச்சரிக்கை

மே 3 ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர். ஆங்கிலத்தில் இதனை 'வொர்க் ஃப்ரம் ஹோம்' எனக் குறிப்பிடுகின்றனர்

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் மே 3-ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாகவும், அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று ஒரு தகவலும், ஒரு லிங்கும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக விளக்கமளித்த பத்திரிகை தகவல் பணியகம் (PIB) , தொலைத்தொடர்புத்துறை சார்பில் மே 3ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளது. 

அத்துடன் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்காக எந்த லிங்கையும் அரசு அறிவிக்கவில்லை என்றும், அது தவறனாது மற்றும் மோசடி கும்பலின் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment