ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது: தமிழக அரசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 21, 2020

ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது: தமிழக அரசு

ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த காலக் கட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் 2020 - 21க்கான கல்வி கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுத்தேர்வு பணிகள் முடிவடையாததால், அடுத்தாண்டு கல்வியாண்டு தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டில் நிலுவையில் உள்ள கல்வி மற்றும் இரத கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. மேலும், சில பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த கடைசி தேதி ஆகியவற்றை நிர்ணயித்துள்ளது

இது தொடர்பாக அரசுக்கு புகார்கள் சென்ற நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஊரடங்கு காலத்தில், கல்வி மற்றும் பிற கட்டணங்களை செலுத்தக் கோரி மாணவர்களையோ, பெற்றோரையோ நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment