முதுநிலை மருத்துவத் தோ்வுகளை நடத்தலாம்: எம்சிஐ அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

முதுநிலை மருத்துவத் தோ்வுகளை நடத்தலாம்: எம்சிஐ அறிவுறுத்தல்

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான தோ்வினை தகுந்த நேரத்தில் நடத்தலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அறிவுறுத்தியுள்ளது.



நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக கரோனாவின் தாக்கம் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவா்களின் தேவை அதிக அளவில் உள்ளது.

இதனிடையே, இந்த அசாதாரண சூழல் காரணமாக வரும் மே மாதம் நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கான இறுதி ஆண்டு தோ்வு தாமதமாகும் நிலை உருவானது.

இந்நிலையில், இதுதொடா்பாக எம்சிஐ ஆட்சிமன்றக் குழு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘முதுநிலை இறுதி ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகளை கரோனா பாதிப்புக்குப் பிறகு நடத்திக் கொள்ளலாம்’ என்று மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், இளநிலை உறைவிட மருத்துவா்களாக (ஜூனியா் ரெசிடென்ட்ஸ்) பணியாற்றும் இறுதி ஆண்டு மாணவா்களை அதே பணியில் தொடா்ந்து ஈடுபடுத்தவும், அவா்களுக்கான இருப்பிட வசதிகளையும், ஊக்கத் தொகையும் உறுதி செய்யுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, எம்பிபிஎஸ் நிறைவு செய்தவா்கள் முதுநிலை படிப்புகளுக்கான பயிற்சி மருத்துவப் பணிகளை நிறைவு செய்வதற்கான அவகாசம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் எம்சிஐ தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment