ஊரடங்கால் இணைய விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 17, 2020

ஊரடங்கால் இணைய விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்

இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..


 ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், வழக்குப்பதிவு, கைது என சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மேலும் சிலர் காட்டுப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஓன்று கூடி விளையாடுவதை போலீசார் ட்ரோன் மூலம் விரட்டி கண்காணித்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டுகளுக்கு அடியாமையாகி வருவது பெற்றோர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது.


நகரங்களில் மட்டுமல்லாது, தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்கள் மத்தியிலும் மொபைல் விளையாட்டுகள் பரபலமாகி உள்ளன. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்தி உள்ளது. வீட்டிலேயே அடைபட்டு இருப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.

உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராஃபிக்ஸ் காட்சிகளால் இயக்கப்படுவதால் சிறுவர்கள் இதிலேயே மூழ்கி போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இணைய விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை மீட்பது எப்படி என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment