சட்டக்கல்லூரியில் இணையம் மூலம் பாடம் கற்பிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 18, 2020

சட்டக்கல்லூரியில் இணையம் மூலம் பாடம் கற்பிப்பு

தேனி சட்டக்கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 முதல் 4 மணி வரை பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேனி அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு பாடத் திட்டத்திலும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 3 ஆண்டு பாடப் பிரிவிலும் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.


இரண்டு பிரிவுகளிலும் தலா 80பேர் வீதம் 160 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி மாணவர்களின் நலன் கருதி ஊரடங்கு முடியும் வகையில் இணையச் செயலி மூலம் பாடம் நடத்த சட்டக்கல்வி இயக்குநர் ந.ச.சந்தோஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதல்வர் ரா.அருண் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.


தினமும் இணையச் செயலி மூலம் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 முதல் 4 மணி வரை பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இம்முறையில் பாடம் கற்கும் மாணவர்களுக்கு இணையதளத்தில் வருகைப் பதிவேடும் எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment