சமையலறை பக்கமே போகாதவர்களுக்கு கைகொடுக்கும் யூ டியூப் குக்கிங் சமையல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 23, 2020

சமையலறை பக்கமே போகாதவர்களுக்கு கைகொடுக்கும் யூ டியூப் குக்கிங் சமையல்

ஊரடங்கு உத்தரவால் சமையலறை பக்கமே போகாதவர்கள் கூட, யூடியூப்பை பார்த்து குக்கிங் செய்ய தொடங்கியுள்ளனர். பேச்சுலர்ஸ் பசங்களுக்கு யூடியூப் சமையல் ரொம்ப கைகொடுத்து வருகிறது


. வகை வகையான சமையலை செய்து அவர்கள் அசத்தி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழகத்தில் 80 சதவீதம் சிறிய, நடுத்தர, பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

திறந்திருக்கும் ஒரு சில ஓட்டல்களிலும் பார்சல் கொடுப்பதற்கு மட்டுமே அனுமதி. அலுவலகங்கள் இயங்கவில்லை. வேலைக்கு செல்ல முடியாத நிலை என்று ஒவ்வொருவரும் படும்பாடு சொல்லிமாளாது.

அவர்கள் வைத்திருந்த பணமும் கொஞ்சம், கொஞ்சமாக கரைய தொடங்கியுள்ளது. இந்த பணத்தை வைத்து ஊரடங்கு உத்தரவை சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஒவ்ெவாருவரும் தள்ளப்பட்டுள்ளனர்.


இதையடுத்து வெளியில் அதிக பணம் கொடுத்து சாப்பிடுவதை விடுத்து வீட்டிலேயே சமையல் செய்ய ஒவ்வொருவரும் தொடங்கியுள்ளனர்.
சமையல் அறை என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் கூட சமையல் அறை பக்கம் போக தொடங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில் அவர்களுக்கு யூடியூப் ரொம்ப கைகொடுத்து வருகிறது. அதில் வரும் செயல்முறையை பார்த்து சமையல் செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் 3 நேரமும் ஓட்டலில் சாப்பிட்டு வந்த பேச்சுலர்சும் யூடியூப்பை பார்த்து சமைக்க தொடங்கியுள்ளனர்.

அதிக செலவு ஏற்படாத சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளியோதரை சாதம் போன்றவற்றை வாய்க்கு ருசியாக செய்ய தொடங்கியுள்ளனர்.


 சிலர் அதற்கு ஒருபடி மேலே போய் பிரியாணி, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, காரக்குழம்பு என்று வகைவகையாக செய்து அசத்தி வருகின்றனர். இக்கட்டான நிலையில் யூடியூப் சமையல் கைகொடுத்து வருவதாக பேச்சுலர்ஸ் நினைக்க தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment