சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு:அண்ணா பல்கலைக்கழகம்  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 22, 2020

சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு:அண்ணா பல்கலைக்கழகம் 

கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,596 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 635 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்


பல்வேறு தளங்களை ஒன்றிணைத்து பேரிடர்களில் இருந்து மக்களை காக்கவே செயலியை உருவாக்க வேண்டும். சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு வழங்கப்படும் எனவும் உரிய வேலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment