CBSE 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 1, 2020

CBSE 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

சிபிஎஸ்இ 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்


. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் (1 முதல் 9 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்த நிலையில், சிபிஎஸ்இ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment