கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் திரட்டப்படுவதாக, முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.
கோவையில் புதிதாக தொற்று பரவாமல் தடுக்கவும், அறிகுறியுள்ளவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது
.பொது வெளியில் மக்கள் நடமாட்டத்தை குறைத்து, சட்டம்-ஒழுங்கை சீர்செய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வ அமைப்பை சேர்ந்தோர், வீடற்றவர்களுக்கு உணவு, இருப்பிடம் வழங்கி வருகின்றனர்.
இவர்களின் பெரிய முயற்சியில், கல்வித்துறையின் பங்களிப்பும் அவசியம் என்பதால், தற்போது புதுமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும், அரசின் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள, தன்னார்வலர்களின் பெயர்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதோடு, செஞ்சிலுவை சங்கம், சாரண, சாரணிய அமைப்புகள், நாட்டு நலப்பணித்திட்டம் உள்ளிட்ட, கல்விசாரா மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆசிரியர்களின் பெயர்களை, ceo_cbe@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில், சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
.கொரோனா விழிப்புணர்வு பணிகளில், கல்வித்துறையின் பங்களிப்பு இருக்கும் வகையில், வட்டார வாரியாக தன்னார்வ ஆசிரியர்களின் பெயர்கள் திரட்டப்படுகின்றன.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகித்தல் உட்பட சில அத்தியாவசிய தேவைகளுக்கு, தன்னார்வலர்கள் தேவைப்படலாம். விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் பட்டியல், கலெக்டருடன் கலந்தாலோசித்து சமர்ப்பிக்கப்படும்.உஷாமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

No comments:
Post a Comment