இந்திய காப்பீட்டுத் துறையின் ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐ (IRDAI), கொரோனா காரணமாக இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கான கடைசித் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் இந்த அமைப்பு, ஆயுள் காப்பீட்டு (life insurance) நிறுவனங்களிடம், சந்தாதாரர்களுக்குத் தேவைப்படும்பட்சத்தில் பிரீமியம் செலுத்தவேண்டிய தேதியை 30 நாள்கள் அதிகமாக நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டது.
அதற்கேற்ப, எல்ஐசி நிறுவனம் பி,ரீமியம் கட்டுவதற்கான தேதியை ஏப்ரல் 15 வரை நீட்டித்தது. இதையடுத்து முன்னணி காப்பீட்டு நிறுவனங்களான ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மார்ச் மாதத்திற்கான பிரீமியம் தேதியை நீட்டித்துள்ளன.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடுகளுக்கான பிரீமியம் தேதியையும் ஏப்ரல் 21 வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை பிரீமியம் செலுத்த இயலாத சந்தாதாரர்கள், ஏப்ரல் 21 வரை செலுத்தலாம் என தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பிரீமியம் செலுத்திய பிறகு புதிதாக வழங்கப்படும் காப்பீடு திட்டம், முன்னர் இருந்த பிரீமியம் தேதியிலிருந்தே தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
ஊரடங்கின்போதும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் இணையம் மூலம் இயங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்கள், முக்கிய தேதிகள் ஆகியவற்றின் அறிவிப்பைத் தங்களது இணையதளத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன
மேலும் SMS, வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலமாகவும் முக்கிய அறிவிப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதோடு, பிரீமியம் புதுப்பித்துக்கொள்ள பேடிஎம், BBPS, கூகுள் பே, ஃபோன் பே ஆகியவற்றின்மூலம் பணம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை இணையத்தில் இருக்கும் பாட்சாட் (botchat) மூலம் உடனடியாக தீர்த்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment