மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை Qualification :Any Degree - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை Qualification :Any Degree

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய மனிதவளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் புக் டிரஸ்ட் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கன்சல்டன்ட், புரோடக்ஷன் எக்ஸிகியூடிவ், அட்மின் எக்ஸிகியூடிவ், மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

. மேற்கண்ட ஒவ்வொரு பணிக்கும் தலா ஒரு காலியிடங்கள் என மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளது.

ஊதியம் : நேஷனல் புக் டிரஸ்ட் கழகத்தின் அறிவிப்பின் படி, கன்சல்டண்ட் பணிக்கு ரூ.

45,000, மற்ற அனைத்து பதவிகளுக்கும் குறைந்தது ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

பி.ஆர் உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், இதழியல் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி தெரிந்திருக்க வேண்டும்.


மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் பணியிடத்திற்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nbtindia.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment