TNEB TANGEDCO: விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

TNEB TANGEDCO: விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றம்!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள சுமார் 2,900 பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.


இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக TNEB TANGEDCO விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது

. அதன்படி, கள உதவியாளர் பயிற்சி பணிக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக இருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, களப்பணி உதவியாளர் பயிற்சி பணிக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக TANGEDCO நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment