ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்கள்?: அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 23, 2020

ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்கள்?: அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு!!

அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

இன்டர்நெட் இல்லாமல் உலகம் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்ப பதிவிறக்கம் செய்யும் வேகம் அமையும்


. 2ஜி, 3ஜி, 4ஜி என வேகம் அதிகரித்து கூறப்படுகிறது, இந்நிலையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இதன் வேகம் எந்த அளவிற்கு என்றால், ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்களை டவுன்லோட் செய்துவிடலாம் என்ற அளவுக்கு அதிவேகமானது

அதாவது ஒரு விநாடிக்கு 44.2 டெராபிட் என்ற வகையில் இந்த இன்டர்நெட் வேகம் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. மோனாஷ் ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிவேக இன்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளனர்


.கண்ணாடி சிப்பில் வழக்கமாக 8 லேசர்கள் பயன்படுத்துவார்கள், ஆனால் அந்த லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்ற புதிய சாதனத்தை பயன்படுத்தி இந்த அதிவேக இன்டர்நெர் சாத்தியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் உலகம் முழுவதும் இந்த வேகம் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment