10 ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 28, 2020

10 ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு

10 ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு
வரும் 15ம் தேதி துவங்க உள்ள 10 ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது.வரும் ஜூன் 15 ம் தேதி முதல் 25 ம் தேதி வரையில் 10-ம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது.


இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் தேர்வு விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:



வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை

வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம்

வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும்.

மாணவர் விடுதிகளை வரும் 11 ம் தேதி முதல் தேர்வுநாள் முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மறு சுழற்சி செய்யக்கூடிய முக கவசம் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment