12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் அளிக்க காரணம் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 28, 2020

12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் அளிக்க காரணம் என்ன?

12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் அளிக்க காரணம் என்ன?
12ம் வகுப்பு வேதியியல் பாடத்தில் மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேதியியல் தேர்வில் புரதங்கள் மற்றும் குளோபுலார் புரதங்கள் என்ற தலைப்பில் 31-வது கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் அவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 24-ஆம் தேதி முடிவடைந்த நிலையில்  பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் தொடங்கியது. இந்த பணியில் 43 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வில்  31-வது கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் அவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment