12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த செல்லும் ஆசிரியர்களுக்கு இ பாஸ் தேவையில்லை- பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 23, 2020

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த செல்லும் ஆசிரியர்களுக்கு இ பாஸ் தேவையில்லை- பள்ளிக்கல்வித்துறை

வழக்கமாக பொதுத் தேர்வு முடிந்து ஓரிரு நாட்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி விடும். ஆனால் இந்த முறை கடந்த மார்ச் 24 ஆம் தேதியே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

 மேலும், விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் விடைத்தாள்கள் வந்துள்ளன. 


ஆனால் சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், சென்னையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியை நடத்தாமல் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். 

அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். 


5 இணை இயக்குநர்களின் கீழ் மாவட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களை திருத்தும் பணிகளை மேற்கொள்ள பள்ளிகள் பல நாட்கள் மூடிக் கிடப்பதால், பள்ளிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த செல்லும் ஆசிரியர்களுக்கு இ பாஸ் தேவையில்லை. ஆசிரியர்களின் அடையாள அட்டையே போதுமானது" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment