ஜூன் 15 முதல் நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி: தமிழக அரசு உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் 4 மணி நேரம் பயிற்சி வகுப்பும், 4 மணி நேரம் பயிற்சி தேர்வு என நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் இணையவழியில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment