பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 199 பேருக்கு வாழ்நாள் தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 27, 2020

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 199 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு


199 பேருக்கு வாழ்நாள் தடை


2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


உத்தரவு


பாலிடெக்னிக் விரிவுரையார் தேர்வில் பங்கேற்ற 199 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு  அறிவிப்பு வெளியிட்டது.


அறிவிப்பு

இதன்படி மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளை அடுத்து ஆசிரியர் தேர்வு  வாரியம் போட்டித் தேர்வு நடத்த அறிவித்தது. இதன்படி, 2017 செப்டம்பர் 16-ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்  2 ஆயிரம் பேருக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.


விசாரணை

அதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 199 பேர் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டித் தேர்வின் விடைத்தாள்களை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, இந்த போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment