மே 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 27, 2020

மே 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

மே 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை




 கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள்( மே 29) வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். மே 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் சூழ்நிலையில் ஆலோசனை நடக்க உள்ளது.


கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31 அன்றுடன் நிறைவு பெறுகிறது. 4ம் கட்ட ஊரடங்கில் பல கட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 இருப்பினும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து நேற்று( மே 26) மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து வெளியிடப்படவில்லை.





இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இ.பி.எஸ்., நாளை மறுநாள்( மே 29) மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். மே 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் சூழ்நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment