இந்த மாவட்டங்களில் உள்ள +2 விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 23, 2020

இந்த மாவட்டங்களில் உள்ள +2 விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி துவங்கும் முனபே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுத்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment