பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: மையங்களில் சி.இ.ஓ., ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 29, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: மையங்களில் சி.இ.ஓ., ஆய்வு


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: மையங்களில் சி.இ.ஓ., ஆய்வு


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்

.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பி.கே.டி., பள்ளி, துணை விடைத்தாள் திருத்தும் மையங்களான, சுபாஷ் மெட்ரிக் பள்ளி, சிவாலிக் பள்ளி, ஆச்சிப்பட்டி பி.வி.என்., பள்ளி என நான்கு மையங்களில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி  துவங்கியது

.முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் மற்ற மையங்களுக்கு துணை முகாம் அலுவலர்களாக பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணியை, முதன்மை கல்வி அலுவலர் உஷா  ஆய்வு செய்தார். 

நான்கு மையங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு வசதி மற்றும் சானிடைசர் மற்றும் முகக்கவசம் வழங்கப்படுகிறதா என விசாரித்தார்

.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு ஆசிரியர், காலையில், 12; மாலையில், 12 விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்வர்; ஒரு நாளைக்கு, 4,500 விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது,' என்றனர்

No comments:

Post a Comment