தமிழகத்தில் இந்த 4 இடங்களுக்கு ரயில்களை இயங்கவேண்டும்: தமிழக அரசு கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 23, 2020

தமிழகத்தில் இந்த 4 இடங்களுக்கு ரயில்களை இயங்கவேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது

அந்த கோரிக்கையில் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.


இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகளை ரயில் நிலையத்தின் மையங்களில் முன்பதிவு செய்யலாம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.


ரயில்வேதுறை முன்னதாக அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment