மாஸ்க் போடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 22, 2020

மாஸ்க் போடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13,900ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஐ எட்டியுள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டுமே 3000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு சென்னையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ‘நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் மூலம் சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 33 பகுதிகளில், சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


 இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 ஆக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மாஸ்க் போடாமல் நடந்து செல்பவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment